தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2014- ஆம் ஆண்டில் அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரிப்பில், விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான படம் குயின். முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குயின் படம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளின் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கி வைத்திருந்தார். குயின் தமிழ் ரீமேக் படத்துக்கு சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத, ரேவதி இயக்கவதாக முதலில் செய்திகள் வந்தன.
கங்கனா ரணாவத் நடித்த வேடத்தில் தமிழில் தமன்னா நடிக்கவிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்னையால் தமன்னா விலகினார். இதனால் குயின் தமிழ் ரீமேக் திட்டம் கைவிடப்பட்டது என தகவல் வெளியானது. ஆனால், குயின் தமிழ் ரீமேக் கைவிடப்படவில்லை என பட தரப்பு கூறியது.
4 மொழிகளிலும் ஒரே சமயத்தில் உருவாகவுள்ளது குயின் படம். தமிழ், கன்னட மொழிகளில் இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்க உள்ளார். தமிழில் தமன்னாவுக்குப் பதிலாக காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார். கமல் நடிப்பில் வெளியான உத்தம வில்லன் படத்தை இயக்கிய ரமேஷ் அரவிந்த் அடுத்து இயக்கும் படம் இது.