ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தோல்விப் படங்கள் கொடுத்ததால், இயக்குநர் ஏ.எல்.விஜய்யை முன்னணி இளம் ஹீரோக்கள் கைவிட்டநிலையில் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார் பிரபுதேவா.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள வனமகன் படம் வருகிற 23ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படம் வெளிவருவதற்கு முன்பே தன்னுடைய அடுத்தப் படத்தை தொடங்கிவிட்டார் ஏ.எல்.விஜய்.
கரு என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ரஜினியின் 2.0 படம் உட்பட பல படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் படம் இது. இந்த படத்தில் பிரேமம் படத்தின் மூலம் பெரும் புகழ்பெற்ற சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக நாக ஷௌர்யா நடிக்கிறார்.
தேவி படத்தில் நடித்த பிறகு ஏ.எல்.விஜய் உடன் நெருக்கமாகிவிட்டார் பிரபுதேவா. ஏ.எல்.விஜய் தற்போது இயக்கியுள்ள வனமகன் படத்திலும் பிரபுதேவா கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளார். இந்த நெருக்கத்தின் காரணமாகவோ என்னவோ கரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் பிரபுதேவா கையால் வெளியிட வைத்துள்ளார் ஏ.எல். விஜய்.