தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாகுபலி 2 படத்தின் வசூல் நாயகன் பிரபாஸ், அடுத்து சாஹோ படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தின் டீசர் பாகுபலி 2 வெளியீட்டின் போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பாகுபலி 2 படத்திற்குப் பிறகு பிரபாஸ் மீடியா முன் வரவேயில்லை. கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக பாகுபலி படத்திற்காக நீளமான தலைமுடி வைத்துக் கொண்டு, வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். படம் வெளிவந்ததும் உலக அளவில் புகழ் பெற்ற இந்திய நடிகராக பிரபாஸ் உயர்ந்துவிட்டார். அவரது நடிப்பைப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இதனிடையே, பிரபாஸ் தன்னுடைய தலைமுடி நீளத்தைக் குறைத்துக் கொண்டு, முழுவதுமாக ஷேவ் செய்துள்ள ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சிலர் அது பிரபாஸ் இல்லையென்றும், சிலர் அது பிரபாஸ்தான் என்றும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். அவர் அமெரிக்காவிற்கு சென்றதாகவும், அங்கு அவரை யாரும் அடையாளம் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக தன்னுடைய தோற்றத்தை மாற்றிக் கொண்டார் என்றும் ஒரு பேச்சு உள்ளது.
பிரபாஸ் முடியை எடுத்தால் கூட இனி செய்தியாகிவிடும் போலிருக்கிறது.