தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நேரம், பிரேமம் ஆகிய படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். தனது அடுத்த படத்தை தமிழில் இயக்கப்போவதாக கூறி வரும் அவர், தற்போது தொபாமா -என்றொரு மலையாள படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை மோசின் காசிம் என்பவர் இயக்குகிறார். அப்படத்தில் பிரேமம் படத்தில் நடித்த நடிகர் களே நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் இளையராஜா பாடிய ரோட்டுல வண்டி ஓடுது என்ற பாடல், அவரது பிறந்த நாளான ஜூன் 2-ந்தேதி வெளியானது. அந்த பாடலை லைக் செய்து அதை தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் அல்போன்ஸ் புத்திரன். ஆனால் ஒரு ரசிகர் அல்போன்ஸ் புத்திரனின் பேஸ்புக் பக்கத்திற்குள் சென்று, இந்த பாடல் கண்டிப்பாக பிளாப்தான் என்று கூறியவர், நீங்கள் சிம்புவின் ரசிகராக இருக்கலாம். ஆனால் இதுபோன்ற விசயங்களை பிரபலப்படுத்தாதீர்கள் என்று பதிவு செய்து அவரை டென்சன் செய்துள்ளார்.
இதையடுத்து, என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் என்ன பதிவு செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எனக்கு நீங்கள் சொல்லித்தர தேவையில்லை. இதுபோன்று பதிவிடுவதை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அவருக்கு காட்டமான பதில் கொடுத்துள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.