பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
காஜல் அகர்வால், ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட நடிகைகள் மும்பையில் இருந்து வந்தவர்கள். அதனால்தான் தென்னிந்திய படங்களில் நடித்துக் கொண்டே இந்தியிலும் மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருந்து வருகிறது. ஆனபோதும், தென்னிந்திய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அவர்களை வடஇந்திய ரசிகர்கள் ஏற்கவில்லை. இவர்களில் காஜல்அகர்வாலை எடுத்துக்கொண்டால், இந்தியில் சில படங்களில் நடித்த போதும் அங்கு மார்க்கெட்டை பிடிக்க முடியாததால் தென்னிந்திய சினிமாவை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார். அதனால் தன்னை தென்னிந்திய நடிகை என்று பெருமையோடு சொல்லிக்கொள்கிறார் காஜல்அகர்வால்.
அது மட்டுமின்றி, வடநாட்டு பெண்களைப் போன்று உடை மற்றும் ஆபரணங்கள் அணியும் பழக்கம் கொண்ட காஜல்அகர்வால், தமிழ், தெலுங்கு படங்களில் பத்து வருடங்களாக நடித்து வருவதால், இப்போது இங்குள்ள கலாச்சாரத்தை பின்பற்றத் தொடங்கியிருக்கிறார். முக்கியமாக, மாடர்ன் கெட்டப்பிலேயே மும்பையில் இருந்து வந்து ஸ்பாட்டில் இறங்கும் காஜல்அகர்வால், சமீப காலமாக புடவை அல்லது பாவாடை தாவணி கெட்டப்பிலும் தமிழ்நாட்டு பெண்ணாக வந்திறங்கி அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்து வருகிறார்.