பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்தியாவில் கூட இப்படி ஒரு வசூலைப் பெறவில்லை, ஆனால், நம்மை விட சீன மக்கள் விளையாட்டின் மீது எந்த அளவிற்கு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதற்கு சீனாவில் 'தங்கல்' படத்திற்குக் கிடைத்த வெற்றியே மிகப் பெரும் சாட்சி.
படம் வெளியான நாளிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வந்த வரவேற்பால் 'தங்கல்' படம் தற்போது வரை சீனாவில் மட்டும் 1097 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் 511 கோடி மட்டுமே மொத்தமாக வசூலித்த நிலையில் சீனாவில் வெளியான இந்தப் படம் 30 நாட்களில் அவ்வளவு பெரிய தொகையை வசூலித்துள்ளது.
இதுவரை 'தங்கல்' படத்தின் மொத்த வசூல் 1870 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இன்னும் 130 கோடி வசூலித்தால் 2000 கோடி வசூலைத் தொட்டுவிடும். இதுவும் விரைவில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒன்று நடந்தால் இந்தியத் திரைப்படம் ஒன்று 2000 கோடி வசூலைப் பெறும் முதல் படம் என்ற பெருமை 'தங்கல்' படத்திற்குக் கிடைக்கும்.
'தங்கல்' படத்திற்கு அடுத்த இடத்தில் 'பாகுபலி 2' படம் 1665 கோடி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.