தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் பிரபலமான மாஜி ஹீரோக்கள் அமிதாப் பச்சன் மற்றும் ரிஷி கபூர். அமிதாப், 70 வயதையும், ரிஷி கபூர் 60 வயதையும் கடந்தவர்கள். தற்போதும் இருவரும் தங்களது வயதுக்கு ஏற்ற கேரக்டரில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து தற்போது அப்பா, மகனாக, 102 நாட் அவுட் என்ற படத்தில் நடிக்கிறார்கள். இதில் 102 வயது அப்பாவாக அமிதாப்பும், 75 வயது மகனாக ரிஷியும் நடிக்கின்றனர். மராத்தியில் வெளியான 102 நாட் அவுட் படத்தை அப்படியே ரீ-மேக் செய்கிறார் இயக்குநர் உமேஷ் சுக்லா.
அப்பா, மகனுக்கு இடையேயான பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு உணர்வுப்பூர்வமான படமாக இப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்புகள் மும்பையில் ஆரம்பமாகின. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி 102 நாட் அவுட் படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.