ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
சமீபகாலமாக நேரடி தமிழ் சீரியல்களுக்கு முக்கியத்தும் கொடுத்து வந்த விஜய் டி.வி., மீண்டும் டப்பிங் சீரியல் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. ஸ்டார் பிளஸ் சேனலில் ஒளிபரப்பான இஷ்க்பாஸ் என்ற தொடரை காதலா காதலா என்ற பெயரில் டப் செய்து ஒளிபரப்புகிறது. நேற்று முன்தினம் முதல் இதன் ஒளிபரப்பு தொடங்கியுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. லலித் மதன் இயக்கி உள்ள இந்த தொடரை 4 லயன்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. குணால் ஜெய்சிங், லீனஸ் மேட்டோ, ஷரீன் பர்கித், மணி ஸ்ரீவஸ்தா உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஓபுராய் என்ற மிகப் பெரிய கோடீஸ்வர குடும்பத்தின் கதை. பல தொழில் நிறுவனங்களை நடத்தும் இந்தக் குடும்பத்தின் இரு மகன்கள் எதிரும் புதிருமாக இருக்கிறார்கள். மருமகள்கள் சொத்தை பிரித்து சென்று தனித்தனி நிறுவனங்கள் நடத்த திட்டமிடுகிறார்கள். ஆனால் இவர்களின் இளைய தலைமுறை மகன்களும் அவர்களின் மனைவிகளும் கூட்டுக் குடும்பத்தை காப்பாற்றுகிற கதை.