இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
திரையுலகத்தில் நடப்பதை விட சுவாரசியமான சில விஷயங்கள், அரசியலில் கூட நடக்காது. அரசியலில் நடப்பதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம், ஏனென்றால் அரசியல்வாதிகள் என்பவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரையுலகத்தில் நடக்கும் சில விஷயங்களைப் பார்த்தால் எப்படி.. இப்படி... என யோசிக்கத் தோன்றும்.
அப்படி ஒரு விஷயம் சமீபத்தில் நடந்திருக்கிறது. 'பீப்' பாடல் புகழ் சிம்பு அடுத்து நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் புகைப்படம் ஒன்று சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது. அதில் சிம்பு முழு உடை அணிந்தும், உடன் இருக்கும் தமன்னா முதுகுப்புறத்தை 95 சதவீதம் திறந்த மேனியாகவும் இருக்கும்படியாக இருந்தது. அதைப் பார்த்ததும் நடிகையும், டிவி தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்திருந்தார். அதன் பின் சமூக வலைத்தளங்களில் அது குறித்து சில கருத்து மோதல்கள் எழுந்தது.
இதையடுத்து லட்சுமி ராமகிருஷ்ணன் நேற்று மீண்டும் ஒரு தகவலை வெளியிட்டார். சிம்பு அவரை தொடர்பு கொண்டு பேசினார் என்பதுதான் அந்தத் தகவல். அதில், “சிம்பு இப்போதுதான் அழைத்தார். இரண்டு பேரும் அவரவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு ஆதரவாக அவர் வர வேண்டும் என கேட்டுக் கொண்டேன்,” என லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.
சிம்புவின் 'பீப்' பாடல் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு எதுவும் தெரியாது போலிருக்கிறது. பெண்களைப் பற்றி மோசமாக விமர்சித்து பாடல் எழுதி, பாடியவரையே பெண்களுக்கு ஆதரவாகப் போராட வாருங்கள் எனக் கேட்டுக் கொண்டது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.