மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
2014ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்து மிகப் பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற படம் 'குயின்'. நடிகை கங்கனா ரனவத்-திற்கு இந்தப் படம் மிகப் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் ஒரே சமயத்தில் படத்தைத் தயாரிக்க அவர் முயற்சிகள் எடுத்து வந்தார். இந்த நிலையில் கன்னடத்தில் இப்படத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது.
'பட்டர்ஃபிளை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். கன்னட நடிகையான பருல் யாதவ், ஹிந்தியில் கங்கனா ரனவத் நடித்த கதாபாத்திரத்தில் நாயகியாக நடிக்கிறார். ஹிந்தியில் லிசா ஹைடன் நடித்த கதாபாத்திரத்தில் எமி ஜாக்சன் நான்கு மொழிகளிலும் நடிக்க சம்மதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தனுஷ் நாயகனாக நடித்து 2004ம் ஆண்டு வெளிவந்த 'ட்ரீம்ஸ்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக அறிமுகமானவர் பருல் யாதவ். அந்தப் படம் ஓடாமல் போனதால் அவருடைய அறிமுகத்தை தமிழில் யாருமே கண்டு கொள்ளவில்லை. அதன் பின் கன்னடப் படங்களில் நடிக்கத் துவங்கிய பருல் யாதவ், தற்போது கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
'குயின்' கன்னட ரீமேக் ஆரம்பமாகியுள்ள நிலையில் மற்ற மொழிகளில் யார் நடிக்கப் போகிறார்கள், யார் இயக்கப் போகிறார்கள் என்பது இன்னும் புதிராகவே உள்ளது.