ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'பிரேமம்' படம் ரிலீசாகி இரண்டு வருடங்களாகி விட்ட நிலையிலும் இன்னும் தனது புதிய படத்தை துவங்காமல் இருக்கிறார் மலையாளம் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். சமீபகாலமாகத்தான் தனது அடுத்த படம் பற்றிய குறிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார். அதன்படி அவரது அடுத்த படம் தமிழில் தான் என்றும் இசை சம்பந்தப்பட்ட படமாக அது இருக்கும் என்றும் கூறியுள்ளார்.. இந்தநிலையில் அவர் படத்திற்கு 'தொபாமா' என பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
ஆனால், இது அவர் இயக்கும் படத்திற்கான டைட்டில் அல்லவாம். அவர் முதன்முதலாக தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள படத்தின் டைட்டில் தான் இது.. இந்தப்படத்தை அல்போன்ஸ் புத்ரனின் நெருங்கிய நண்பரான மோசின் காசிம் என்பவர்தான் இயக்கவுள்ளார். பிரேமம் படத்தில் இடம்பெற்ற சிஜூ வில்சன், கிருஷ்ண சங்கர், ஷராபுதீன் மற்றும் சபரீஷ் வர்மா ஆகிய நால்வரும் தான் இந்தப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தொபாமா' என பெயர் வைக்கப்பட்டாலும் இது முழுக்க முழுக்க இளைஞர்களை கவரும் விதமான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்கிறார்கள்.