Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

வினீத் சீனிவாசன் பட ஆடியோவை வெளியிட்டார் மோகன்லால்..!

06 ஜூன், 2017 - 16:03 IST
எழுத்தின் அளவு:
Mohanlal-released-Vineeth-Srinivasan-movie-audio

இளம் வயதிலேயே இயக்குனராகிவிட்டவர் மலையாள நடிகர் சீனிவாசனின் மகனான வினீத் சீனிவாசன். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுக்க வேண்டும் என்பதாலோ என்னவோ ஒரு படத்திற்கும், இன்னொரு படத்திற்கும் கொஞ்சம் அதிகமான இடைவெளி எடுத்துக் கொள்கிறார். இந்த நேரத்தில் அவரை மற்ற இயக்குனர்கள் தங்களது படங்களில் ஹீரோவாக நடிக்க கொத்திக் கொண்டு போய்விடுகின்றனர். அப்படி அவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் தான் 'எபி'.


பெரிய வரவேற்பை பெறாவிட்டாலும் முதலுக்கு மோசமில்லை என்றும் சொல்லும் அளவுக்கு படம் ஓரளவு தேறியது. இதை தொடர்ந்து 'ஒரு சினிமாக்காரன்' என்கிற படத்தில் நடித்து வந்தார் வினீத் சீனிவாசன். ரம்ஜான் ரிலீஸாக தயாராக உள்ள இந்தப்படத்தின் ஆடியோவை நேற்று மோகன்லால் வெளியிட்டார்.. அவருடன் மோகன்லால் படத்தை தற்போது இயக்கிவரும் இயக்குனர் லால் ஜோசும் உடன் கலந்துகொண்டார்.. லியோ தாடஸ் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவர்தான் மலையாளத்தில் நடிகை அஞ்சலி நடித்த ஒரே படமான 'பையன்ஸ்' என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in