பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், பெங்காலி, மராத்தி, பஞ்சாபி என பல மொழிகளிலும் படங்களை தயாரித்தவர் டி.ராமா நாயுடு. தமிழைப்பொறுத்தவரை சிவாஜியின் வசந்தமாளிகை, ரஜினியின் தனிக்காட்டு ராஜா மற்றும் கைநாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இந்த டி.ராமாநாயுடுவின் பேரன்தான் பாகுபலி பட வில்லன் ராணா டகுபதி.
இவர் தற்போது நேனே ராஜூ நேனே மந்திரி என்ற படத்தில் நடித்து வருகிறார். தேஜா இயக்கி வரும் இந்த படத்தில் ராணாவுக்கு ஜோடியாக காஜல்அகர்வால், கேத்ரின் தெரசா நடிக்கிறார்கள். இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடியில்தான் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த படத்தின் டீசர் இன்று (ஜூன்-6) வெளியாகியுள்ளது. மேலும், மறைந்த தயாரிப்பாளர் டி.ராமாநாயுடுவின் பிறந்த நாள் என்பதால் இன்றைய தினம் தான் நடித்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார் ராணா, அதை தாத்தாவின் பிறந்த நாள் விழாவாகவும் விமரிசையாக கொண்டாடுகிறார்.