சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
குட்டிப்புலி, கொம்பன், மருது படங்களை இயக்கிய முத்தையா அடுத்து தற்போது இயக்கி வரும் படம் கொடிவீரன். இதில் குட்டிப்புலிக்கு பிறகு முத்தையாவுடன் இணைந்திருக்கிறார் சசிகுமார். மகிமா, சனுஷா, பூர்ணா நடிக்கிறார்கள். விதார்த் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்புகள் சிவகங்கையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்தப் படத்தின் வில்லனாக தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் இப்போது பல படங்களில் ஹீரோவாக நடிப்பதால் அவருக்கு பதிலாக மதயானைக்கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் வில்லனாக நடிக்க இருக்கிறார். இன்னும் சில நாட்களில் சிவகங்கையில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விக்ரம் சுகுமாறன் நடிக்க இருக்கிறார். விக்ரம் சுகுமாறன், சசிகுமார் மற்றும் முத்தையாவின் நண்பர் என்பதாலும் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருப்பதாலும் இந்த வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டிருப்பதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது.