இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இங்கிலீஷ், விங்கிலீஷ் படத்திற்கு பிறகு ஸ்ரீதேவி பாலிவுட்டில் நடித்துள்ள படம் மாம். ரவி உதய்பூர் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீதேவியுடன் நவாசுதீன் சித்திக்கும் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீதேவியிடம், நவாசுதீன் உடன் நடித்த அனுபவம் குறித்து கேட்டபோது, ஸ்ரீதேவி கூறியதவாது... "நவாசுதீன் சித்திக்கை திரையில் காண்பது அருமையானது. அவருடன் நடித்தது மறக்க முடியாது. சினிமாவிற்கு கிடைத்த பரிசு நவாசுதீன். அவரின் உழைப்பை பார்த்து நான் வியந்துள்ளேன்" என்று புகழ்ந்துள்ளார்.
மாம் படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருக்கிறார். அவருடன் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஹிந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மாம் படம் வருகிற ஜூலை 7-ம் தேதி ரிலீஸாக உள்ளது.