இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
2008-ம் ஆண்டு சீனாவின், பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தவர் அபினவ் பிந்த்ரா. இவரது வாழ்க்கை சினிமாவாக உருவாக உள்ளது. இதில் அபினவ் பிந்த்ராவாக நடிகர் அனில் கபூரின் மகன் ஹர்சவர்தன் கபூர் நடிக்க இருக்கிறார். அதுமட்டுமல்ல இதில் அபினவ் பிந்த்ராவின் தந்தை ரோலில் அனில் கபூரே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அனில் கபூரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது... "படம் பற்றி இப்போதைக்கு நான் எதுவும் கூற முடியாது. எல்லாம் முடிவாகட்டும், பிறகு சொல்கிறேன். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, கடவுள் ஆசீர்வதித்தால் நிச்சயம் நாங்கள் இருவரும் இணைந்து நடிப்போம். ஹர்சவர்தன் உடன் நடிக்க நானும் மிகுந்த ஆவலில் உள்ளேன்" என்று கூறியுள்ளார்.