மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
டோரா படத்தை அடுத்து இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர்காலம், வேலைக்காரன் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. திரிஷ்னா என்ற மலையாள படத்திலும் பிருத்விராஜூடன் இணைந்து நடிக்கிறார். இதற்கிடையே தெலுங்கில் கோபிசந்துக்கு ஜோடியாக ஆறடுகுலா புல்லட் -என்ற படத்திலும் நடித்துள்ளார் நயன்தாரா. சில ஆண்டுகளாக படமாகி வந்த இப்படத்தை கோபால் இயக்கியுள்ளார், மணிசர்மா இசையமைத்துள்ளார்.
மேலும், கோபிசந்தின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்று கூறப்படும் இந்த படத்தில் நயன்தாராவும் ஒரு அழுத்தமான ரோலில் நடித்திருக்கிறார். அவர்களுடன் பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாசராவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த ஆறடுகுலா புல்லட் படம் வருகிற ஜூன் 9-ந்தேதி வெளியாகிறது. 2 மணி நேரம் 15 நிமிடம் கொண்ட இந்த படத்திற்கு தணிக்கைக்குழுவினர் நேற்று யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.