டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ருத்ரமாதேவி, 'பாகுபலி' படங்களை தொடர்ந்து தற்போது அனுஷ்கா தெலுங்கில் உருவாகியுள்ள 'பாக்மதி' என்கிற சரித்திர படத்திலும் நடித்து வருகிறார். ஜி.அசோக் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் முன்னணி கதாநாயகர்கள் என யாரும் இல்லாத நிலையில் மலையாள நடிகர்கள் ஜெயராம், உன்னிமுகுந்தன் மற்றும் நடிகர் ஆதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் மலையாள இளம் முன்னணி நடிகரான உன்னி முகுந்தன்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் உன்னி முகுந்தன் அனுஷ்காவின் நடிப்பையும் பெருந்தன்மையையும் தன்னிடம் நட்பாக பழகிய விதத்தையும் குறித்து மனம் திறந்து பாராட்டி இருந்தார்.. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் உன்னிமுகுந்தனை பாராட்டும் விதமாகவும் அனுஷ்காவும் தனது பேஸ்புக் புக்கத்தில் உன்னிமுகுந்தன் பற்றி எழுதியுள்ளார். அதில், “சக நடிகராக, நண்பராக எளிமையாக பழகி ஒத்துழைத்த உங்களுக்கு நன்றி.. உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.. உங்களது வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்” என நன்றி தெரிவித்துள்ளார் அனுஷ்கா.