Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஆண்களை இழிவுபடுத்துவதா? நடிகை மேக்னா ராஜ் வீடு முற்றுகை

05 ஜூன், 2017 - 12:17 IST
எழுத்தின் அளவு:
Oppose-for-actress-Meghnaraj

தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா படங்களில் நடித்தவர் மேக்னா. தற்போது அவர் மலையாளம் மற்றும் கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடித்து வரும் கன்னடப்படம் ஜிந்தா. இதனை மகேஷ் இயக்குகிறார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் மேக்னா ராஜ் ஆண்களை கடுமையாக விமர்சித்து பேசும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதற்கு ரசிகர்கள் இணையதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.


இந்த நிலையில் நேற்று கன்னட அமைப்பினர் பெங்களூருவில் உள்ள மேக்னா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். படத்தில் அந்த காட்சிகளை நீக்க வேண்டும். மேக்னா மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோஷம் எழுப்பினர். வீட்டுக்கு வெளியே வந்த மேக்னா "ஆண்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் அந்த வசனம் வைக்கப்படவில்லை. கதைக்கு தேவைப்பட்டதால் வைக்கப்பட்டது. முழுபடத்தையும் பார்த்தால் அது உங்களுக்கு புரியும். படம் வெளிவரும் வரை காத்திருங்கள் அதன் பிறகு உங்கள் கருத்தை தெரிவியுங்கள்" என்றார். பின்னர் போலீசார் வந்து போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


Advertisement
தயாரிப்பாளர் மீது அவந்திகா ஷெட்டி பாலியல் புகார்தயாரிப்பாளர் மீது அவந்திகா ஷெட்டி ... மீண்டும் மலையாளத்தில் மகிமா: மம்முட்டியுடன் நடிக்கிறார் மீண்டும் மலையாளத்தில் மகிமா: ...


வாசகர் கருத்து (2)

Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05 ஜூன், 2017 - 23:35 Report Abuse
Ramesh Rayen சினிமாவில் வந்த வசனமா? ஐயோ ஆண்டவரே
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
05 ஜூன், 2017 - 17:25 Report Abuse
Sathish பேரழகி பேசினால் ரசிக்காமல் கோபப்படுகிறார்களே.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seemathurai
    • சீமத்துரை
    • நடிகை : வர்ஷா பொல்லம்மா
    • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
    Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
    Tamil New Film Kaaviyan
    • காவியன்
    • நடிகர் : ஷாம்
    • நடிகை : ஸ்ரீதேவி குமார்
    • இயக்குனர் :பார்த்தசாரதி
    Tamil New Film Aan Devathai
    • ஆண் தேவதை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ரம்யா பாண்டியன்
    • இயக்குனர் :தாமிரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in