புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை ஆகிய படங்களை இயக்கியவர் சீனுராமசாமி. இவற்றில் தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை ஆகிய மூன்று படங்களிலும் விஜய்சேதுபதி ஹீரோ. இடம் பொருள் ஏவல் படம் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.
சீனுராமசாமி கடைசியாக இயக்கிய தர்மதுரை படம் ஓரளவு வெற்றியடைந்தது. இந்தப் படத்துக்குப் பிறகு மாமனிதன் என்ற படத்தை இயக்க இருக்கிறார் சீனுராமசாமி. இந்தப்படத்திலும் விஜய் சேதுபதியே ஹீரோவாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.
இதற்கிடையில் சசிகுமாரை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் சீனுராமசாமி. இந்தப்படத்தில் சசிகுமார் விவசாயியாக நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போதைய சூழலில் ஒரு விவசாயி எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறதாம். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. விவசாயி என்ற தலைப்பு பரிசீலனையில் இருப்பதாக தகவல் அடிபடுகிறது.