தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் விவேக் ஓபராய், சமீப காலமாக தனது புதிய படமான பேங்க் சோர் படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படம் ஜூன் 16 அன்று ரிலீசாக உள்ளது. சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, சல்மான் கானின் ட்யூப்லைட் படம் பற்றி விவேக் ஓபராய் கருத்து தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ட்யூப்லைட் படம், உலக முழுவதும் இந்திய சினிமாவிற்கு கவுரவத்தை ஏற்படுத்தி தரும் என நினைக்கிறேன். அவ்வாறு நடக்க ட்யூப்லைட் படக்குழுவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ட்யூப்லைட் படம், பாகுபலி 2.,வின் அத்தனை சாதனைகளையும் முறியடிக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.