‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பழம்பெரும் குணசித்ர நடிகரும், காமெடி நடிகருமான சாமிக்கண்ணு நேற்று காலமானார். அவருக்கு வயது 95. சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த சாமிக்கண்ணு முதுமை காரணமாக நோயால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்காமல் நேற்று அவர் காலமானார். அவருக்கு விசாலாட்சி என்ற மனைவியும், தயானந்தன், விவேகானந்தன் என்ற 2 மகன்களும், ராஜராஜேஸ்வரி, அம்பிகா என்ற 2 மகள்களும் உள்ளனர். இன்று மாலை அவரது இறுதி சடங்குகள் நடக்கிறது.
சாமிக்கண்ணு தனது 8 வயது முதல் நாடகங்களில் நடித்து வந்தார். 1954ம் ஆண்டு புதுயுகம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சகலகலா வல்லவன், வண்டிச் சக்கரம், உதிரிபூக்கள், என் ராசாவின் மனசிலே, ஜானி உள்பட 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.