மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இந்தியில் தற்போது அஜய்தேவ்கான் நாயகனாக நடிக்கும் கோல்மால் அகைன் என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் தபு. இந்த படத்தை ரோஹித்செட்டி இயக்குகிறார். இதையடுத்து தெலுங்கில் நாகார்ஜூனா-அமலாவின் மகன் அகில் அக்கினேனி நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத ஒரு படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்கிறார் தபு. இந்த படத்தை தமிழில், அலை, யாவரும் நலம், 24 ஆகிய படங்களை இயக்கிய விக்ரம்குமார் இயக்குகிறார். முக்கியமாக, மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாக சைதன்யா, அகில் அக்கினேனி என தாத்தா, மகன், பேரன்கள் அனைவரும் இணைந்து நடித்த மனம் என்ற தெலுங்கு படத்தை இயக்கியவர் இவர்தான்.
இந்நிலையில், அகில் அக்கினேனி நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் வேலைகளை தொடங்கியிருக்கிறார் விக்ரம்குமார். இந்த படத்தில் அகிலின் அம்மாவாக நடிக்க வேண்டும் என்று தபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தனது கதாபாத்திரம் குறித்து முழுமையாக கேட்ட தபு, அதில் திருப்தியடையாமல் பின்னர் படத்தின் மொத்த ஸ்கிரிப்டையும் வாங்கி படித்துள்ளார். அப்போது தனது கதாபாத்திரத்திற்கு இருந்த முக்கியத்துவத்தை அறிந்து அகில் அக்கினேனிக்கு அம்மாவாக நடிக்க அக்ரிமென்டில் கையெழுத்திட்டாராம் தபு.