சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
கமலின் விஸ்வரூபம், விஸ்வரூபம்-2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்தவர் பூஜாகுமார். அதையடுத்து மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் நடித்தார். தற்போது சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் நாயகனாக நடிக்கும் கருடா வேகா என்ற படத்தில் பூஜாகுமார் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். வில்லனாக கன்னட நடிகர் கிஷோர் நடிக்க, இந்தி நடிகை சன்னி லியோன் ஒரு பாட்டுக்கு குத்தாட்டமாடுகிறார். பிரவீண் சத்தரு படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஸ்வாதி என்றொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பூஜாகுமார். அதுவும் 6 வயது சிறுமிக்கு அம்மாவாக நடிக்கிறாராம். முதலில் சிறுமிக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்றதும் சற்று தயங் கிய பூஜாகுமார், டைரக்டர் அந்த கேரக்டருக்கு கதையில் இருக்கும் முக்கியத் துவத்தைப் பற்றி சொன்னதும் டபுள் ஓகே சொல்லி களமிறங்கி விட்டாராம்.
மேலும், இதுவரை நடித்த படங்களில் மேக்கப்போட்டு பளபளக்கும் ஆடைகளில் ஜொலித்த பூஜாகுமார் இந்த படத்தில் ஏழை பெண் வேடம் என்பதால் அதற்கேற்ற எளிமையான கெட்டப்பிலேயே நடித்து வருகிறார்.