ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கும் படம் சங்கமித்ரா. சரித்திர கதையில் தயாராகும் இந்த படத்தில் ஜெயம்ரவி-ஆர்யா நாயகர்களாக நடிக்க ஸ்ருதிஹாசன் சங்கமித்ரா என்ற டைட்டீல் ரோலில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில தினங்களுக்கு முன்பு தன்னிடம் முழுக்கதையையும் சொல்லவில்லை. சரியான படப்பிடிப்பு தேதியை சொல்லவில்லை என்று சில குற்றச்சாட்டுகளை வைத்து விட்டு அந்த படத்தில் இருந்து தான் வெளியேறுவதாக சொன்னார் ஸ்ருதிஹாசன்.
இந்நிலையில், தற்போது அந்த படத்தில் சங்கமித்ராவாக நடிக்கப்போகும் நடிகை யார் என்கிற அடுத்தக்கட்ட கேள்விகள் எழுந்துள்ளன. அனுஷ்கா, நயன்தாரா போன்ற நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் கோலிவுட்டில் வெளியாகி வந்த நிலையில், தற்போது ஹன்சிகா நடிக்கயிருப்பதாக இன்னொரு செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், கோலிவுட்டில் என்ட்ரியானபோது சின்ன குஷ்பு என்று அழைக்கப்பட்ட ஹன்சிகா, சுந்தர்.சி இயக்கிய தீயா வேலை செய்யனும் குமாரு, அரண்மனை, அரண்மனை-2, ஆம்பள ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அதனால் சங்கமித்ராவில் ஹன்சிகா நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.