பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை ஹிந்தியில் படமாக உருவாகி வருகிறது. சஞ்சய் நண்பரும், இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி இப்படத்தை இயக்க, சஞ்சய் ரோலில் ரன்பீர் கபூர் நடிக்கிறார். இவருடன் அனுஷ்கா சர்மா, சோனம் கபூர், தியா மிர்சா, மனீஷா கொய்ராலா, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் வேளையில், இந்தாண்டு இறுதியில் படம் ரிலீஸாவதாக இருந்தது. அதுவும் சல்மான் நடித்து வரும் டைகர் ஜிந்தா ஹே படத்துடன் ரிலீஸாகும் சூழல் இருந்தது. அதேசமயம் படத்தின் ரிலீஸ் தேதி போகலாம் என அரசல்புரசலாக செய்தி வந்த நிலையில், இப்போது ரிலீஸ் அடுத்தாண்டுக்கு தள்ளிப்போவதாக படக்குழுவே அறிவித்துள்ளது. அதன்படி சஞ்சய் தத் படம் 2018-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி ரிலீஸாக உள்ளது. சஞ்சய் தத் படத்தை ராஜ்குமார் ஹிரானி, விது வினோத் சோப்ரா மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கிறார்கள்.