ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் கமல்ஹாசன் நடத்துகிறார். அதேபோல் தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அந்த நிகழ்ச்சியை ஜூனியர் என்டிஆர் நடத்துகிறார். அதில் சிரஞ்சீவி, நாகார்ஜூனா உள்ளிட்ட பல தெலுங்கு சினிமா பிரபலங்கள் கலந்து கொள்கிறார்களாம்.
இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரித்த அதே ஸ்டார் டிவி நிறுவனமே தமிழ், தெலுங்கிலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளை வழங்குகிறது. இந்தநிலையில், பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் வில்லனாக நடித்த தெலுங்கு நடிகர் ராணாவும் ஒரு புதிய டாக் ஷோ நிகழ்ச்சியை தெலுங்கு சேனல் ஒன்றில் வழங்கப்போகிறாராம். நாட்டு நடப்புகள் குறித்து காரசார விவாதம் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் பேச்சுத்திறமையுள்ள நேயர்களுக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறதாம்.