ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த 2001ம் ஆண்டு வெளிவந்த படம் ஆளவந்தான். கமல்ஹாசன் நடிப்பில் அப்போதே 20 கோடி ரூபாய் செலவில் உருவான படம். தயாரிப்பாளர் தாணு தயாரித்தார். கமலுடன், ரவீனா டண்டன், மனீஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், கிட்டி இவர்களுடன் தெலுங்கு மற்றும் இந்தி நடிகர், நடிகைகளும் நடித்திருந்தார்கள். சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இந்தி இசை அமைப்பாளர்கள் சங்கர், ஈஷான், லாய் இசை அமைத்திருந்தார்கள். திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். அப்போதே 600 தியேட்டர்களில் வெளியான படம்.
கமல் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படம் அப்போது முழுமையான வெற்றியைப் பெறவில்லை. அப்போது புதிய கதை களங்கள், புதிய முயற்சிகளை ரசிகர்கள் ஏற்கவில்லை. இப்போது ரசிகர்களின் ரசிப்புத்தன்மை மாறிவிட்டது. புதுமையை வரவேற்கிறார்கள். இதனால் ஆளவந்தான் படத்தை மீண்டும் வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு முடிவு செய்திருக்கிறார். படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றி 500 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். ஆளவந்தான் படத்தின் நீளம் கருதி அப்போது பெரிய பட்ஜெட்டில் உருவான பல சண்டை காட்சிகள் வெட்டப்பட்டது. அந்த காட்சிகளையும் இணைத்து படத்தை வெளியிடுகிறார்.