'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திறமையான இயக்குனர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தகுந்த வாய்ப்புகளை அளிப்பதில் தமிழ்த் திரையுலகத்தில் முதலிடத்தில் இருப்பவர் விஜய் சேதுபதி. அவருக்காகவே கதையை உருவாக்கும் அளவிற்கு பல இளம் இயக்குனர்கள் தமிழ்த் திரையுலகத்திற்குள் நுழைந்துள்ளனர். சினிமாவில் பணம் சம்பாதிக்க மட்டும் நினைக்காமல், நல்ல பெயரையும் சம்பாதிக்க நினைப்பவர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர்.
'இறுதிச் சுற்று' படத்தை இயக்கிய சுதா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. முதலில் இதற்காக சிவகார்த்திகேயனைத்தான் அணுகினாராம் சுதா. ஆனால், அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க உள்ளதால் சுதா இயக்கத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் சிவகார்த்திகேயன்.
விஜய் சேதுபதியிடம் தன்னுடைய கதையைச் சுதா சொன்னதாகவும், கதை பிடித்துப் போன விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதி கைவசமும் அடுத்த படங்கள் இருப்பதால் அவர் இந்தப் படத்திற்காக எப்போது கால்ஷீட் கொடுப்பார் என்பது தெரியவில்லை.
கதை கிடைத்தாலும் கதைக்கான நாயகர்கள் கிடைப்பதுதான் இப்போது பிரச்சனையாக உள்ளது.