வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
சில வருடங்களுக்கு முன்பு தமிழில் விக்ரம்-ஜீவா நடித்த 'டேவிட்' என்கிற படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார் தற்போது மலையாளத்தில் 'சோலோ' என்கிற படத்தை இயக்கி வருகிறார். துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் ஐந்து கதாநாயகிகள் இடம்பெறுகின்றனர். அவர்களில் பாலிவுட் நடிகையான நேகா சர்மாவும் ஒருவர். தற்போது கடந்த சில நாட்களாக துல்கர் சல்மான், நேகா சர்மா இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் பிஜாய் நம்பியார்.
இந்தப்படத்தில் நேகா சர்மா தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணாக நடிக்கிறார். அவருக்கு தமிழ் டயலாக் பேச உதவியாக இருப்பது சாட்சாத் நாயகன் துல்கர் சல்மான் தான். அதேசமயம், படப்பிடிப்பு தளத்தில் அவர் கஷ்டப்பட்டு ஏதாவது வசனத்தை மனப்பாடம் செய்து தயாராக நிற்கும்போது துல்கர் சல்மான் ஏதாவது கலாட்டா பண்ணி நேகாவை குழப்பி விட்டுவிடுவாராம். சமீபத்தில் மண்பானை செய்யும் இடத்தில் காட்சி ஒன்று படமாக்கப்பட்டபோது நேகா சீரியஸாக டயலாக் பேப்பரை படிப்பதையும் அவரை எப்படி வம்பிழுக்கலாம் என துல்கர் சல்மான் ஐடியா பண்ணுவதையும் தான் மேலே உள்ள படத்தில் பார்க்கிறீர்கள்.