ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் தமிழ்நாட்டில் நேரடித் தமிழ்ப் படங்களையும் மிஞ்சும் அளவிற்கு அதிக வசூலைப் பெற்றன. இதனால், தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அவர்கள் நேரடியாகத் தமிழில் எடுக்கிறார்களோ இல்லையோ ஆனால், நேரடித் தமிழ்ப் படங்கள் என விளம்பரப்படுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் விரைவில் தமிழுக்கும் வரும் படம் 'ஸ்பைடர்'.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் வீடியோ பார்வை ஒன்று நேற்று காலை வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே யு டியூபில் அது சாதனைகளைப் புரிந்து வருகிறது.
தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் விஜய், அஜித் படங்களுக்கிடையேதான் யு டியூபில் அதிகமான போட்டி இருக்கும். ஆனால், இப்போது அவர்களுக்கே சவால் விடும் வகையில் மகேஷ் பாபுவின் 'ஸ்பைடர்' பார்வை டீசர் அமைந்துள்ளது. 24 மணி நேரத்தில் இந்த டீசர் 46 லட்சம் பார்வைகளைக் கடந்தும், 1 லட்சத்து 90 ஆயிரம் லைக்குகளைக் கடந்தும் புதிய சாதனை படைத்துள்ளது.
விஜய், அஜித் நடித்து வெளிவரும் படங்களின் டீசர்தான் இப்படி சாதனைகளைப் படைப்பது வழக்கம். ஆனால், முதன் முறையாக ஒரு தெலுங்கு ஹீரோவின் டீசர் தமிழ் ஹீரோக்களின் டீசருக்குப் போட்டியாக வந்திருக்கிறது.
செப்டம்பர் மாதம் 'ஸ்பைடர்' படம் வெளிவரும் போது வசூலிலும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.