ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து வரும் 'காலா' படத்தின் சில புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.. மஹிந்திரா தர் வகையை சேர்ந்த அந்த ஜீப்பை மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் அருண் மஹிந்திரா வாங்கி தங்களது ஆட்டோ மியூசியத்தில் வைப்பதாக சொலும் அளவுக்கு அந்த ஜீப்பும் புகழ்பெற்றுவிட்டது. எம்.ஹெச் என்கிற அதன் பதிவு என்னை பார்த்து இது மும்பை கதைதான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ரசிகர்களும் திருப்திப்பட்டு கொண்டார்கள்..
ஆனால் அந்த ஜீப்பின் நம்பரின் பின்னணியில் படத்திற்கான சில சுவாரஸ்ய விஷயங்களை இயக்குனர் ரஞ்சித் ஒளித்து வைத்துள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. அந்த ஜீப்பின் பதிவெண் MH 01 BR 1956.. இதில் BR என்பது டாக்டர் அம்பேத்காரை குறிப்பதாகவும் 1956 அவர் இறந்த வருடத்தை குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது. பா.ரஞ்சித்தை பொறுத்தவரை டாக்டர் அம்பேத்கரை தீவிரமாக பின்பற்றுபவர் என்பதால் படத்தில் அம்பேத்கர் பற்றி நினைவூட்டல் செய்வதற்காக இந்த பதிவெண்ணை வைத்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.