மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
பாலிவுட்டின் பிரபலமான நடிகை ரவீணா டாண்டன். தமிழில் ஆளவந்தான் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் மாத்தர் என்ற படம் வெளியானது. அதனைத்தொடர்ந்து இப்போது சாப் என்ற படம் வெளியாக உள்ளது. ஆகையால் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார் ரவீணா. சமீபத்தில் சாப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரவீணா, ஒருகாலத்தில் சஞ்சய் தத் மீது அலாதி பிரியம் கொண்டிருந்ததாக கூறியிருக்கிறார்.
இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது... "பாலிவுட்டில் எனக்கு பிடித்த நடிகர்கள் காலத்திற்கு ஏற்றபடி மாறிக்கொண்டே இருந்தார்கள். நான் சிறுமியாக இருந்தபோது ரிஷி கபூரை ரொம்ப பிடித்தது. பின்னர் டீன்ஏஜ் பெண்ணாக மாறியபோது சஞ்சய் தத் மீது பைத்தியமாக அலாதி பிரியம் கொண்டிருந்தேன்" என்று கூறியுள்ளார்.
சாப் படத்தில் ரவீணா, கொஞ்சம் கிளாமராகவும், நெகட்டீவ் கலந்த ரோலிலும் நடித்திருக்கிறார். ஆனிர் இயக்கியுள்ளார். ரவீணாவுடன் அசிஷ் பிஸித், அர்பிதா சாட்டர்ஜி, கெளரவ் நந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் 30-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.