பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஹுமா குரேஷி மற்றும் பலர் நடிக்கும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் சில நாட்களுக்கு முன்பு ஆரம்பமானது. தினமும் பெரும் திரளான மக்கள் மத்தியில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் படத்தில் ஹுமா குரேஷி நாயகியாக நடிக்கிறார் என்ற செய்தி வெளிவந்த நாளிலிருந்து இன்று காலை வரை ஹுமா குரேஷி அது பற்றி எதுவும் சொல்லாமல் அமைதி காத்து வந்தார். சற்று முன்னர்தான் 'காலா' படத்தில் நடிப்பதைப் பற்றிய தகவலை அவர் தன்னுடைய டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.
படத்தில் அவர் ஜரீனா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள தகவலையும், படத்தின் ஸ்கிரிப்ட் பக்கம் ஒன்றில் சிறு பகுதியையும் அவர் பகிர்ந்துள்ளார். ஜரீனா என்ற பெயர் முஸ்லிம் பெயர். படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் பற்றி வெளியான புகைப்படங்களிலும் ரஜினிகாந்த் முஸ்லிம்கள் அணியும் குல்லாவை அணிந்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்குக் சென்று தாதாவான ஒரு மும்பைத் தமிழரின் கதைதான் 'காலா' என்ற செய்தி வெளியானது. ஆனால், இந்தப் படம் ஹாஜி மஸ்தான் கதை அல்ல என தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்தும் அறிவிப்பு வெளியானது. ஆனால், நடப்பதையெல்லாம் பார்த்தால்....எந்த 'மஸ்தான்' கதையைப் படமாக்குகிறார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.