'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல இணையதள டிவியான யப் டிவியில், மினி உலககோப்பையான சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை நேரடி நிகழ்வாக கண்டு ரசிக்கலாம்.
தெற்கு ஆசியாவில் முன்னணி இணையதள டிவி.,யாக உள்ளது யப் டிவி. இந்த டிவி பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அதுமட்டுமின்றி சீசனுக்கு தகுந்தபடி அந்த நிகழ்ச்சிகளையும் ஒளிப்பரப்பு செய்து வருகிறது. ஏற்கனவே டுவென்டி-20 உலககோப்பை நடந்தபோது அதை ஒளிப்பரப்பு செய்த இந்த டிவி, இப்போது மினி உலக கோப்பையையும் லைவ்வாக ஒளிபரப்ப இருக்கிறது.
அதன்படி, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை யப் டிவி., பெற்றுள்ளது. அதேசமயம் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் ஒளிபரப்பாகாது.
இதுகுறித்து யப் டிவியின் உதய் ரெட்டி கூறியிருப்பதாவது... "சாம்பியன்ஸ் டிராபி டிஜிட்டல் உரிமத்தை நாங்கள் பெற்றிருப்பது மகிழ்ச்சி. இணையம் வாயிலாக சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை நேரடியாக காணலாம், கிரிக்கெட் தொடர்பான தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் ஜூன் 1-ம் தேதி முதல் ஆரம்பமாகின்றன. சுமார் 18 நாட்கள் நடக்க உள்ள இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த அணியினர் இருபிரிவினராக பிரிந்து விளையாட உள்ளனர்.