வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
துறுதுறு நடிப்புக்கு பெயர்போன 'நாடோடிகள்' அனன்யாவுக்கு திருமணத்திற்கு பின் வாய்ப்புகள் சரிவர அமையவில்லை என்பதே கடந்த மூன்று வருட நிலவரம்.. அதிலும் கடந்த வருடம் தெலுங்கில் மட்டும் அவர் நடித்த ஒரே ஒரு படம் வெளியானது அவ்வளவுதான். இந்தநிலையில் மலையாளத்தில் பிருத்விராஜ் - இந்திரஜித் சகோதரர்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'தியான்' படத்தில் நடித்துள்ளார் அனன்யா. இந்தப்படத்தில் அனன்யா இந்திரஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.
படத்தின் கதையை எழுதி முக்கியமான மந்திரவாதி கேரக்டரிலும் நடித்துள்ளார் நடிகர் முரளிகோபி. அனன்யாவின் கேரக்டர் படத்தில் திருப்புமுனையாக அமையும் என்று சொல்கிற இயக்குனர் ஜியேன் கிருஷ்ணகுமார், அதேபோல இந்தப்படமும் அனன்யாவுக்கு திருப்புமுனையாக அமையும் என கூறியுள்ளார். அனன்யாவும் இந்தப்படத்தைத்தான் மலைபோல நம்பியுள்ளார். இது வரலாற்று படம் இல்லை என்றாலும், வரலாற்று பின்னணி கொண்ட வட இந்திய நகரங்களில் இந்தப்படம் படமாக்கப்பட்டுள்ளது.