Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபல இயக்குநர் தாசரி நாரயண ராவ் காலமானார்

30 மே, 2017 - 19:56 IST
எழுத்தின் அளவு:
Well-known-film-producer-Dasari-Narayana-Rao-dead

ஐதராபாத்: தெலுங்கு பட உலகின் பிரபல இயக்குநர் தாசரி நாரயண ராவ் காலமானார். அவருக்கு வயது 75.


இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் தாசரி நாராயண ராவ். இந்தியாவில் அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையையும் பெற்றவர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் உள்ள பாலகொல்லுவில் பிறந்த தாசரி நாரயண ராவ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 151 படங்களை இயக்கி உள்ளார்.


53 படங்கள் தயாரித்துள்ளார். 250 படங்களில் வசனகர்த்தாவாகவும், பாடல்கள் இயற்றியும் உள்ளார். தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர்காங்கிரஸ் கட்சியில் மத்திய அமைச்சர் ஆகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இரண்டு தேசிய விருதுகள், 9 நந்தி விருதுகளும், 4 பிலிம்பேர் விருதுகளும் பெற்றுள்ளார். அதிகபடங்களை இயக்கி லிம்கா சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளார். தெலுங்கு படவுலகில் நடிகரும், இயக்குனருமான மோகன் பாபுவை அறிமுகம் செய்தவரும் இவர் தான்.


நுரையீரலில் ஏற்பட்ட தொற்றால் அவதிப்பட்டு வந்த தாசரி நாராயணராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.


ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை அம்மா எனும் பெயரில் திரைப்படமாக எடுக்க இருப்பதாக தாசரி நாராயண ராவ் அறிவித்திருந்தார். அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அவர் மரணம் அடைந்துள்ளார்.


தாசரி நாரயண ராவ்வின் மறைவிற்கு நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் பிரபலங்களும், தெலுங்கு சினிமா பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in