'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'நேரம்', 'பிரேமம்' ஆகிய படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் அடுத்து இயக்கும் படம் குறித்து சமீபத்தில் டுவீட் செய்திருந்தார். 'இன்னும் இரண்டு மாதங்களில் எனது அடுத்தை படத்தை துவங்கி விடுவேன். அடுத்த படம் மியூசிக் சம்பந்தப்பட்டது. இந்த படத்தில் என் நண்பர் நிவில் பாலி நடிக்கவில்லை'' என்று குறிப்பிட்டிருந்தார்.
அல்போன்ஸ் புத்திரன் இயக்கவுள்ள இந்த படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக காளிதாஸிடம் இப்போது பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது.
காளிதாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'மீன் குழம்பும் மண் பானையும்'. இந்த படம் தவிர பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் 'ஒரு பக்க கதை' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இந்தப் படம் வருடக்கணக்கில் கிடப்பில் கிடக்கும் நிலையில், காளிதாஸுக்கு அல்போன்ஸ் புத்திரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மலையாளம் தமிழ் என இரண்டு மொழிகளில் இந்தப்படம் வெளியாக இருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் காளிதாஸ்.