இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
சினிமாவில் நடித்துப்பார் வீட்டை கட்டிப்பார் என்பதுதான் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகைகளின் தாரக மந்திரமாக இருக்கும். கடந்த இரண்டு வருடத்திற்கு முன் பிரேமம் படம் மூலம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த அனுபமா பரமேஸ்வரனின் லட்சியமும் அந்தப்பாதையில் இருந்து மாறவா போகிறது.. இதோ தனது சொந்த ஊரில் அழகிய வீட்டை கட்டியுள்ள அனுபமா அந்த வீட்டிற்கு 'பிரேமம்' என்றே பெயர் சூட்டியுள்ளார்.
ரசிகர்களுடன் அனுபமா அறிமுகமாகி அதாவது பிரேமம் படம் வெளியாகி நேற்றுடன் இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில் தனது சொந்த வீட்டின் பெயர் பொறித்த முன்புற தோற்றத்தை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் அனுபமா. அதுமட்டுமல்ல தன்னை கதாநாயகியாக அறிமுகமாக்கிய அல்போன்ஸ் புத்ரன், தன் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் அன்வர் ரஷீத், உடன் நடித்த நிவின்பாலி, மடோனா, சாய் பல்லவி உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் அனுபமா.