‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இந்தியில் ஒளிரப்பான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ பெரிய அளவில் பிரபலமானது. குறிப்பாக திரைநட்சத்திரங்கள் பலரும் அதில் பங்கேற்று வந்ததோடு, சல்மான் கான் நடத்தியபோது அந்த நிகழ்ச்சிக்கு இன்னும் பெரிய ரீச் கிடைத்தது. அந்த நிகழ்ச்சியை வழங்கிய ஸ்டார் குழுமம் தற்போது தமிழில் கமல்ஹாசனை வைத்து விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்ய இருக்கிறது. இந்தியில் வெளியானது போல் இல்லாமல் தமிழுக்காக புதுமையான முறையில் அந்த நிகழ்ச்சியை தயாரித்து வருகிறார்கள்.
மேலும், தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபோது பேசிய கமல், இந்தியில் சல்மான்கான் நடத்தியது தனக்கு பிடித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார். அதோடு, இந்தியில் வெளியானது போன்று இல்லாமல் தமிழில் புதிய முறையில் உருவாகயிருப்பதினால் தான் அதில் பங்கேற்பதாகவும் தெரிவித்தார் கமல். இந்தநிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தெலுங்கில் ஒளிபரப்பு செய்வதாகவும், ஸ்டார் டிவி குழுமம் அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியை தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்குகிறாராம். இந்தி, தமிழைப்போல் இல்லாமல் இன்னொரு புதிய வடிவத்தில் தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.