ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
சமீபத்தில் இர்பான் கான் நடிப்பில் வெளியான படம் ஹிந்தி மீடியம். விமர்சன ரீதியாக பாராட்டை பெற்ற இப்படம் பெரிய லாபம் தரவில்லை என்றாலும் சுமாரான வெற்றியை பெற்றுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் உள்ளார் இர்பான். இந்நிலையில் ஹிந்தி மீடியம் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் பேசிய இர்பானிடம், ஹிந்தி மீடியம் படத்தை கங்கனா பாராட்டியது குறித்து கேட்டபோது, அதற்கு பதிலளித்த இர்பான்...
"கங்கான ஒரு சிறந்த நடிகை. அவர் படம் இயக்க போவதாக நான் கேள்விப்பட்டேன். ஆகையால் அவரது படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வரும் என்று எதிர்பார்த்திருக்கிறேன். சக நடிகனாக கங்கனாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். தனது சொந்த முயற்சி மற்றும் உழைப்பால் இந்தளவுக்கு அவர் முன்னேறி இருக்கிறார்" என்று புகழ்ந்துள்ளார்.