பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, ஸ்ரேயா, தமன்னா மற்றும் பலர் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படத்திற்காக யுவனின் இசையில் உருவாகியுள்ள பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜுன் மாதம் இப்படத்தின் இசையை வெளியிட உள்ளார்கள்.
அதற்கு முன்னதாக ஜுன் 2ம் தேதியன்று இளையராஜா பிறந்த நாளில் அவர் இந்தப் படத்திற்காகப் பாடியுள்ள 'ரோட்டுல வண்டி ஓடுது' என்ற பாடலை மட்டும் வெளியிட உள்ளார்கள். 'ஸ்பிரிச்சுவல் கானா' என இந்தப் பாடலைக் குறிப்பிட்டுள்ளார்கள். படத்தில் அஸ்வின் தாத்தா கதாபாத்திரம் இந்தப் பாடலைப் பாடும் என்று தெரிகிறது.
இந்தப் பாடலை இளையராஜா பாடியதற்காக சிம்பு தன்னுடைய நன்றியைத் தெரிவித்துள்ளார். யுவன் - சிம்பு கூட்டணியில் வெளிவந்த படங்கள் அனைத்திலும் பாடல்கள் சூப்பர் ஹிட்டானவை என்பது குறிப்பிடத்தக்கது. அது போன்றே இந்தப் படத்திலும் அமையும் என இருவரது ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.