ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் ஆர்யாவுடன் கடம்பன் படத்தில் நடித்த கேத்ரின் தெரசா அதையடுத்து விஷ்ணுவுடன் கதாநாயகன் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் சரைனோடு படத்தில் நடித்தவர் தற்போது ராணாவுடன் நேனே ராஜூ நேனே மந்திரி படத்தில் நடித்து வருகிறார். மேலும், சரைனோடு படத்தில் ஹன்சிதா ரெட்டி என்ற எம்எல்ஏ வேடத்தில் நடித்த கேத்ரின் தெரசா, நேனே ராஜூ நேனே மந்திரி படத்தில் ஒரு டிவி சேனல் உரிமையாளராக நடித்து வருகிறார்.
கதைப்படி, இப்படத்தின் நாயகனாக ராணாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, கேத்ரின் தெரசா நெகட்டீவ் கலந்த ஒரு அதிரடியான வேடத்தில் நடிக்கிறாராம். அந்தவகையில், ராணாவுடன் எதிரும் புதிருமான வேடத்தில் நடிக்கும் கேத்ரின் தெரசா, இந்த படத்தில் தனது கேரக்டருக்கு இன்னொருவர் டப்பிங் பேசுவதை விட தான் பேசினால் தான் சிறப்பாக இருக்கும் என்று முன்கூட்டியே இயக்குனரிடம் சொல்லி அனுமதி பெற்ற பிறகுதான் கால்சீட் கொடுத்தாராம்.