Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'சங்கமித்ரா', ஸ்ருதிஹாசன் நீக்கம், ரசிகர்கள் வரவேற்பு

30 மே, 2017 - 11:03 IST
எழுத்தின் அளவு:
Fans-welcome-shrutihassan-out-in-Sangamithra-film

'சங்கமித்ரா' படத்தில் ஸ்ருதிஹாசனுடன் தொடர்ந்து பணிபுரிய இயலாது என படத் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நேற்று மாலை அறிவிப்பை வெளியிட்டார்கள். அவர்களுடைய அறிவிப்பில் ஸ்ருதிஹாசன் பற்றி எந்த ஒரு குறையையும் சொல்லாமல் பண்பான விதத்தில் அறிவித்திருந்தார்கள். ஆனால், அடுத்த அரை மணி நேரத்தில் ஸ்ருதிஹாசன் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கை என்ற ஒன்று வெளியானது. அதில் படத்தின் ஸ்கிரிப்ட்டை முழுமையாகத் தரவில்லை, படப்பிடிப்புத் தேதிகளைப் பற்றி சரிவரத் தெரிவிக்கவில்லை. அதனால், படத்திலிருந்து விலகுகிறோம் என்ற காரணத்தைச் சொல்லியிருந்தார்கள்.


அதே சமயம், பட இயக்குனரான சுந்தர் .சி, தரப்பிலிருந்து ஸ்ருதிஹாசன் படத்திலிருந்து விலகவில்லை, நாங்கள்தான் அவரை நீக்கினோம். ஆனால், அதற்கான காரணத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாது என தெரிவித்திருந்தனர்.


இதனிடையே, 'சங்கமித்ரா' படத்தில் இனி ஸ்ருதிஹாசன் இல்லை என்ற செய்தியை டிவிட்டரில் வெளியிட்ட பதிவில் ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்ட்டுகளை பதிவிட்டிருந்தனர். அதில் ஒருசேர அனைவருமே அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்திருந்தனர்.


ஒரு இளவரசியாக ஸ்ருதிஹாசனை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அவர் 'சங்கமித்ரா' கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் அல்ல என்பதுதான் அனைவரது கமெண்ட்டுகளிலும் இருந்த பொதுவான ஒரு விஷயமாக இருந்தது. 'புலி' படத்தின் தோல்விக்கான காரணங்களில் ஸ்ருதிஹாசனும் ஒருவர். 'சங்கமித்ரா' படத்திற்கு இனி நல்ல காலம், இனி படம் ஹிட்டு என்றெல்லாம் தெரிவித்துள்ளனர்.


ஸ்ருதிஹாசனுக்குப் பதிலாக அடுத்து 'சங்கமித்ரா' கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in