நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ரஜினிகாந்த்தின் பேத்தி வயதிருக்கும் நடிகைகள் கூட அவருடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடித்து விட வேண்டும் என்று தங்களது பேட்டிகளில் அவர்களது ஆசை என வெளிப்படுத்துவார்கள். ஆனால், ரஜினிகாந்தின் 'காலா' படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தும் ஹுமா குரேஷி அமைதியாகவே இருக்கிறார்.
ஹிந்தியில் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகையாகவெல்லாம் ஹுமா இல்லை. 'காலா' படத்தில் நடிக்கும் மற்ற நடிகைகளான அஞ்சலி பாட்டீல், சாக்ஷி அகர்வால் ஆகியோர் குறைந்த பட்சம் 'காலா' பட போஸ்டரையாவது தங்களது டுவிட்டரில் ரி-டிவீட் செய்திருக்கிறார்கள். ஆனால், ஹுமா குரேஷி அதைக் கூடச் செய்யவில்லை என்பது ஆச்சரியம்.
ரஜினிகாந்துடன் ஹுமா குரேஷிதான் நாயகியாக நடிக்கப் போகிறார் என்ற செய்தியை நாம்தான் முதலில் வெளியிட்டோம். அதன் பின் அந்த செய்தி தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது, மற்ற மீடியாக்களிலும் பரபரப்பான செய்தியாக வெளிவந்தது.
ஹுமா குரேஷி, 'காலா' படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ள உள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின் அதைப் பற்றிப் பேசலாம் என அமைதி காக்கிறாரோ என்னமோ...?.