பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கேரளாவில் மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்ததாக நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். இன்றும் மலையாள படங்களில் பெரும்பாலானவற்றில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள், பாடல்கள், போஸ்டர்கள் என ஏதோ ஒன்று தவறாமல் இடம்பிடித்து விடுகிறது. டிவி ஷோக்களில் கேட்கவே வேண்டாம்.. விஜய் பாடல்களை பாடுவது, விஜய் போல மிமிக்ரி பண்ணுவது என தங்களை விஜய் ரசிகர்களாக காட்டிக்கொள்கிறார்கள்.
அப்படி ஒரு காமெடி ஷோவில் நடிகர் ஜெயராம், சமீபத்தில் வெளியான தனது 'அச்சாயன்ஸ்' பட புரமோஷனுக்காக கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேரள விஜய் ரசிகர் ஒருவர், விஜய் படங்களில் அவர் பேசிய கடினமான மாடுலேஷன்கள் கொண்ட வசனங்களையும் தத்ரூபமாக பேசி கைதட்டல் வாங்கினார். அவர் பேசப்பேச அதற்கான விஜய்யின் ஒரிஜினல் 'கிளிப்'புகளும் சவுண்ட் இல்லாமல் திரையிடப்பட்டன. இரண்டும் பர்பெக்ட்டாக மேட்ச் ஆனது. இதனை பார்த்த ஜெயராம் அந்த ரசிகரை கைதட்டி பாராட்டினார். அப்போது அவரிடம் விஜயின் தீவிர ரசிகன் நான்.. விஜய்யை சந்திப்பது தான் என் லட்சியம் என்றார். அதற்கு நிச்சயமாக உன்னை விஜய்யுடன் சந்திக்க வைக்கிறேன்.. அதற்கு நான் பொறுப்பு என மேடையிலேயே அனைவர் முன்னிலையிலும் வாக்கு கொடுத்தார் ஜெயராம்.