தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் ரிலீசான, சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை பற்றிய டாக்குமென்ட்ரி படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்றுள்ளது. ரிலீசான 2 நாட்களில் இப்படம் ரூ.17.65 கோடியை வசூலித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தை புரோமோட் செய்வதற்காக படத்தின் டைரக்டர் கபில் சர்மா நடத்தும் காமெடி நைட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சச்சினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம். ஆனால் இந்நிகழ்ச்சியில் கலந்த கொள்ள சச்சின் மறுத்துவிட்டாராம்.
மராத்தி ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட பல தளங்களில் இப்படத்திற்கு போதுமான அளவிற்கு சச்சின் புரோமோஷன் செய்து விட்டாராம். அப்படி இருக்கையில் கபில் சர்மாவின் அழைப்பை மட்டும் சச்சின் ஏன் நிராகரித்தார் என்பதற்கான காரணம் ஆண்டவனுக்கு தான் தெரியும் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரங்கள். ஆனால் அது பற்றி சச்சினின் புரோமோஷன் குழுவிடம் கேட்ட போது, எந்த இந்தி ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என்பதில் சச்சின் உறுதியாக இருப்பதே இதற்கு காரணம் என கூறுகின்றனர்.