பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
மலையாள சினிமாவில் வில்லன், குணச்சித்திர நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்டவர் பாபுராஜ். இன்னும் சரியாக சொல்லவேண்டும் என்றால் நடிகை வாணி விஸ்வநாத்தின் கணவர்.. மலையாள சினிமாவில் அக்கிரமம் செய்யும் போலீஸ் அதிகாரி என்றால் கூப்பிடு பாபுராஜ் என்கிற அளவுக்கு அதிக அளவில் போலீஸ் கேரக்டர்களில் நடித்தவர்.. கடந்த சில வருடங்களாகத்தான் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார்..
தற்போது தமிழில் இவருக்கு அழைப்பு வந்துள்ளது. ஆம்.. 'வாலு' விஜயசந்தர் விக்ரமை வைத்து இயக்கிவரும் ஸ்கெட்ச்' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்து வருகிறார் பாபுராஜ். இதற்குமுன், அதாவது 13 வருடங்களுக்கு முன் தமிழில் அஜித்தை வைத்து ஷாஜி கைலாஷ் இயக்கிய 'ஜனா' படத்தில் பாபுராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.