தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் திலகம் சிவாஜி ஏற்காத வேடம் இல்லை. நடிக்காத கேரக்டர் இல்லை. 300 படங்களை தாண்டி நடித்த சிவாஜி ஒரு படத்தைக்கூட இயக்கியதில்லை. "சினிமா இயக்குனர் வேலை ரொம்ப வெயிட்டானது அதை தாங்க என்னால் முடியாது. எல்லா நடிகர்களும், நடிகைகளும் என்னைப்போலவே நடிக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்புறம் படம் முழுக்க சிவாஜி கணேசன்தான் இருப்பார்கள். அவரவர்களுக்கு தெரிஞ்ச வேலையை அவரவர்தான் செய்ய வேண்டும். நமக்கு தெரிஞ்சது நடிப்புதான்" என்பார் சிவாஜி.
என்றாலும் சாதனை என்ற படத்தில் சிவாஜியை இயக்குனராக நடிக்க வைத்து விட்டார்கள். சிவாஜியுடன் பிரபு, கே.ஆர்.விஜயா, நளினி உள்பட பலர் நடித்த இந்தப் படம் 1986ம் ஆண்டு வெளிவந்தது. ஏ.எஸ்.பிரகாசம் இயக்கினார். இளையராஜா இசை அமைத்திருந்தார். ஒரு திரைப்படத் தயாரிப்பாளரின் பிசியான வேலை காரணமாக அவர் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும், தொழில் போட்டியில் ஜெயித்துக் காட்டுவதுமான கதை. சிவாஜி இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்தவர் பிரபு. அவரது ஜோடியாக நடித்தவர் நளினி. படம் வெளியாகி வெற்றி பெற்றது.