வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
உதயநிதி ஹீரோவாக அறிமுகமான ஓகே ஓகே படம் மட்டும்தான் ஏ பி சி என அனைத்து சென்டர்களிலும் வெற்றியடைந்தது. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'சரவணன் இருக்க பயமேன்' படம் சிட்டியில் எடுபடவில்லை. அதே சமயம் பி அண்ட சி யில் தற்போது சில ஊர்களில் ஷிப்ட்டிங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தப்படத்தைத் தொடர்ந்து அவர் விக்ரமனின் உதவியாளர் தளபதி பிரபு இயக்கத்தில் 'பொதுவாக எம் மனசு தங்கம்' மற்றும் சிகரம் தொடு பட இயக்குநர் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் 'இப்படை வெல்லும்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் உதயநிதி.
இந்த இரண்டில் மஞ்சிமா மோகன் உடன் இணைந்து நடிக்கும் 'இப்படை வெல்லும்' படத்தில் உதயநிதி, மஞ்சிமா இருவருமே சாஃப்ட்வேர் இஞ்சினியர்களாக நடிக்கிறார்களாம். அது மட்டுமல்ல இந்தப் படம் ஏ சென்டர் ரசிகர்களுக்கான படமாம் இது.
பி அண்ட் சியில் ரீச்சாக வேண்டும் என்று ஆசைப்படும் உதயநிதி அதற்கேற்ற கதையை தேர்வு செய்யாமல், ஏ சென்டர் ரசிகர்களுக்கான கதையிலும் நடிக்கிறார். சரவணன் இருக்க பயமேன் படத்தின் மூலம் பி அண்ட் சி யை ரீச் பண்ணியவர் இப்படை வெல்லும் படத்தின் மூலம் மீண்டும் ஏ சென்டர் ஹீரோவாகிவிட்டார்.